செய்திகள்

உடல்நலக்குறைவு ஜெயேந்திரர், விஜயவாடா ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2016-08-30 12:50 IST   |   Update On 2016-08-30 12:51:00 IST
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக விஜயவாடாவில் உள்ள ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்துரு விரதத்தை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடத்தி வருகிறார்.

ஆடி மாதத்தில் தொடங்கிய இந்த விரதம் 2 மாதம் நடக்கும். விரதத்தின் போது விஜயவாடாவிலேயே தங்கி இருந்து பூஜை செய்ய வேண்டும்.

அங்கிருந்து வெளியே செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி விஜயவாடாவிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சி மட நிர்வாகிகள், சீடர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திர ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் மயங்கி விழுந்தது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக காஞ்சி மட நிர்வாகிகள் கூறுகையில், ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகளின் உடல்நிலை சீராக உள்ளது. பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

Similar News