செய்திகள்
கடலூர் ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் அட்டூழியம்-அஞ்சி நடுங்கும் இளம்பெண்கள்: போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
கடலூர் திருப்பாதிரி புலியூர் ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் அட்டூழியத்தால் இளம்பெண்கள் அஞ்சு நடுங்கின்றனர். இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை கடந்து பல ரெயில்கள் செல்கின்றன. ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் சில ரெயில் நிற்பதில்லை.
ஒரு ரெயிலுக்கும் மற்றொரு ரெயிலுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அதன் பின்னரே மற்ற ரெயில்கள் வருகின்றன. இதனால் பயணிகள் வருகையும் மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் இரவில் வரக்கூடிய ரெயிலுக்காக ஒரு சில பயணிகளே வருகின்றனர்.
திருப்பாதிரிப் புலியூர் ரெயில் நிலையம் குடிமகன்களின் மதுக்கடை பாராக மாறியுள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். கூட்டமாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். அப்போது பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிக்கொண்டு விசில் அடித்து ரகளை செய்கின்றனர். அந்த வழியாக வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர்.
தவறான நோக்கத்தில் பெண்களை நெருங்குகின்றனர். இதனால் ரெயில் பயணிகளும், பெண்களும் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு அஞ்சுகின்றனர்.
இதுகுறித்து குடிமகன்களை யாராவது தட்டிக்கேட்டால் தகராறு ஏற்பட்டு அடி-தடி மோதலில் முடிகிறது. ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் சென்று தட்டிக்கேட்டால் அவர்களை திட்டி மிரட்டுகின்றனர். ரெயில் நிலையத்திலும், ரெயில்வே போலீஸ் நிலையம் இல்லை.
ரெயில்வே போலீசார் இரவு 11 மணிக்கு மேல் வந்துவிட்டு காலை 6 மணிக்கு சென்று விடுகின்றனர். காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை ரெயில் நிலையத்தில் எந்த பிரச்சினை நடந்தாலும், குற்ற சம்பவங்கள் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் முதுநகர் அல்லது சிதம்பரம் ரெயில்வே போலீசாரிடம் தான் புகார் அளிக்கமுடியும்.
பின்னர் அவர்கள் இங்கு வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காலதாமதமாகிவிடும். மேலும் ரெயில் வரும் போது பயணிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளம் அருகேயும், ரெயில் அருகேயும், விரைவாக நடந்து செல்கின்றனர். இதனை தடுப்பதற்கும் போலீசார் இல்லை.
இதுமட்டுமின்றி ஏதேனும் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டு உடல் சிதறிய நிலையில் பிணங்கள் கிடந்தால் அதை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் காலதாமதம் ஆகிறது.
எனவே ரெயில்வே போலீசார் திருப்பாதிரி புலியூர் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?