செய்திகள்
தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்த சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் போலீசார் விசாரணை
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் இருந்து பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந் தேதி தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றபோது அதில் கட்டுக்கட்டாக 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ஆய்வு செய்த தபால் துறை உயர் அதிகாரிகள், அந்த பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவற்றை சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில் அதே தபால் பெட்டியில் மீண்டும் 6-ந் தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந் தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் கிடந்தன. 3 நாட்களும் சேர்த்து மொத்தம் 51 பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றின் உரிமையாளர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அதில் இருந்த முகவரிகளுக்கு சம்மன் அனுப்பினார்கள்.
மேலும் அந்த பாஸ்போர்ட்டுகளில் சென்னை முகவரியில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள், அந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை விமான நிலையத்தில் தொலைந்து போனதாகவும், அதற்கு பதிலாக மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்று விட்டதாகவும் கூறினார்கள்.
இதையடுத்து பழவந்தாங்கல் போலீசார், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தொலைந்து போன பாஸ்போர்ட்டுகள் ஏதாவது கண்டெடுக்கப்பட்டு உள்ளதா?, தொலைந்து போன பாஸ்போர்ட்டு குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா?. தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை விமான நிலையத்தில் தொலைந்து போனவை தானா? என்பது குறித்து விமான நிலையத்தில் உள்ள பதிவேடுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விசாரணை விரைவில் முடிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.