செய்திகள்

கேளம்பாக்கத்தில் பெண் டாக்டர் மர்ம சாவு

Published On 2016-04-24 17:56 IST   |   Update On 2016-04-24 17:56:00 IST
கேளம்பாக்கத்தில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்போரூர்:

புதுவை, நைனார்மண்டபம் பகுதியைச்சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சுமிதா (வயது 27).

பி.டி.எஸ் படித்து விட்டு திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் டாக்டராக பணி புரிந்து வந்தார்.

கேளம்பாக்கத்தில் தங்கி இருந்த அவர் வீட்டிற்கு அருகிலேயே கிளினிக்கும் வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு சுமிதா வீட்டில் இறந்து கிடப்பதாக புதுவையில் உள்ள தந்தை சரவணனுக்கு தகவல் வந்தது.

இதுபற்றி அவர் தனது நண்பர் மூலம் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று தரையில் விழுந்து கிடந்த சுமிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த மின் விசிறியில் கயிறு ஒன்று தொங்கி கொண்டு இருந்தது.

போலீஸ் விசாரணையில் கேளம்பாக்கத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் அடிக்கடி சுமிதாவுடன் பேசுவதும், அவரும் அடிக்கடி அந்த ஓட் டலுக்கு சாப்பிட செல்வதும் தெரியவந்தது.

அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுமிதா சாவில் மர்மம் நீடிக்கிறது. அவர் கொலைசெய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டருக்கும் ஓட்டல் ஊழியருக்குமான தொடர்பு என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஓட்டல் ஊழியரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Similar News