செய்திகள்

பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை: பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை

Published On 2016-04-23 12:45 IST   |   Update On 2016-04-23 12:45:00 IST
பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இசை கச்சேரி நடத்தி வருகிறார்.  இவரது மனைவி சித்ரா (29). அருகில் உள்ள இவர்களது மற்றொரு வீட்டில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த வித்யா சாகர் (34). அவரது மனைவி ஸ்ரீஜா (29). ஆகியோர் குடியிருந்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரபாகர் கச்சேரிக்காக வெளியூர் சென்றிருந்தார். அப்போது தனியாக வீட்டில் இருந்த   சித்ராவுக்கு வித்யா சாகரும் அவரது மனைவி ஸ்ரீஜாவும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 11/2 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ. 4500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.இது தொடர்பாக பாலு செட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து  திருப்பூரில் பதுங்கி இருந்த வித்யாசாகர், ஸ்ரீஜாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2 ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது வித்யா சாகர் இறந்து  விட்டார்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி ஸ்ரீஜாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உள்ளார்.

Similar News