செய்திகள்

காஞ்சீபுரம்–திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்

Published On 2016-04-21 13:14 IST   |   Update On 2016-04-21 13:14:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களை மாவட்ட கலெக்டர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற ஏப்ரல் 22–ந் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுலவகத்தில் அளிக்கலாம். வேட்புமனுத்தாக்கல் வரும் 29–ந் தேதி வரை பெறப்படும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஏப்ரல் 30ம் தேதியும், போட்டியிலிருந்து விலக விரும்புவோர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற மே மாதம் 2ந் தேதியும் கடைசி நாளாகும்.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி:– மண்டல அலுவலகம் 15, பெருநகர சென்னை மாநகராட்சி, நெ.120, ராஜிவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர். தேர்தல் நடத்தும் அலுவலர், செந்தில்வேல், உதவி ஆணையர் (கலால்) காஞ்சீபுரம்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி:– மண்டல அலுவலகம் 12, பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.1, புது தெரு, ஆலந்தூர். தேர்தல் நடத்தும் அலுவலர், ராஜேந்திரன், தனி துணை ஆட்சியர் (நில எடுப்பு) காஞ்சிபுரம்.

ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதி:– தாலுக்கா அலவலகம், ஸ்ரீபெரும்புதூர். தேர்தல் நடத்தும் அலுவலர், பாரி, கூடுதல் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு), காஞ்சீபுரம்.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி:– பல்லாவரம் நகராட்சி அலுவலகம், குரோம்பேட்டை. தேர்தல் நடத்தும் அலுவலர், விஸ்வ நாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியளர் (நில எடுப்பு), காஞ்சிபுரம்.

தாம்பரம் சட்டமன்ற தொகுதி:– வருவாய் கோட்ட அலுவலகம், ஜி.எஸ்.டி.ரோடு, தாம்பரம் சானிடோரியம், சென்னை–45. தேர்தல் நடத்தும் அலவலர், விமல்ராஜ், வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம்.

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி:– வருவாய் கோட்ட அலுவலகம், செங்கல்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர், பன்னீர்செல்வம், வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி:– தாலுக்கா அலுவலகம், திருப்போரூர் ஆகும், தேர்தல் நடத்தும் அலுவலர் , கோவிந்தராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், காஞ்சிபுரம்.

செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி:– தாலுக்கா அலுவலகம், செய்யூர் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், ஜெயக்குமார், தனி துணை ஆட்சியர் (ச.பா.தி), காஞ்சீபுரம்.

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி:– வருவாய் கோட்ட அலுவலகம், ஜி.எஸ்.டி.ரோடு, மதுராந்தகம் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், பர்கத்பேகம், வருவாய் கோட்டாட்சியர், மதுராந்தகம்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி:– மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் (2வது மாடி), காஞ்சிபுரம் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், பவணந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி:– சப்-கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சீபுரம் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், அருண்தம்புராஜ், சப்–கலெக்டர், காஞ்சீபுரம்.

திருவள்ளுர் மாவட்டத் தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் விவரம் வருமாறு:–

கும்மிடிப்பூண்டி தொகுதி:– கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சி யர் மல்லிகா.

பொன்னேரி தொகுதி:– பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன்.

திருத்தணி தொகுதி:– திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலர் சேதுமாதவன்.

திருவள்ளுர் தொகுதி:– திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஷ்வரன்.

பூந்தமல்லி தொகுதி:– பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன்.

ஆவடி தொகுதி:– ஆவடி வட்டாட்சியர் அலுவலகம், உதவி ஆணையர் (கலால்) முத்துசாமி.

மதுரவாயல் தொகுதி:– மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகம், அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வீரப்பன். அம்பத்தூர் தொகுதி:– அம்பத்தூர் மண்டல அலுவலகம் (மண்டலம்7), மண்டல அலுவலர் நடராஜன்.

மாதவரம் தொகுதி:– மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், தனித்துணை ஆட்சியர் (சிறப்பு திட்ட அமலாக்கம்) பார்வதி.

திருவொற்றியூர் தொகுதி:– திருவொற்றியூர் மண்டல அலுவலகம் (மண்டலம்1), திருவொற்றியூர் மண்டல அலுவலர் பென்சமின் பாபு.

Similar News