செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் தீ விபத்து: 6 குடிசைகள் எரிந்து நாசம்
திருக்கழுக்குன்றத்தில் தீ விபத்து 6 குடிசைகள் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த பரமசிவம்நகர் நேருதெருவில் வசிக்கும் கார்த்திக் என்பவரது குடிசை வீடு நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது. பலத்த காற்று காரணமாக அருகில் உள்ள பூபாலன், சுவாமிநாதன், வெங்கடேசன், சொக்கலிங்கம், அன்பு ஆகியோரின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு படையினர் சென்று போராடி தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர்.
தீப்பற்றிய 6 வீடுகளில் இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் கிடைத்ததும் தாசில்தார் சீதா, வருவாய் ஆய்வாளர் சுமதி ஆகியோர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். தீ விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.