U23 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்: அணிக்கான டைட்டில் வென்றது இந்திய பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள்
- அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வென்றனர்.
- 5 பிரிவில் தங்கப் பதக்கம் கிடைத்தது.
23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.
பிரியான்ஷி பிரஜாபாத் (50கி), ரீனா (55கி), ஸ்ரீஷ்டி (68கி), பிரியா (76கி) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
நேஹா ஷர்மா (57கி), தன்வி (59), பிரகதி (62கி), சிக்ஷா (65) , ஜோதி பென்வால் (72கி) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஹினாபென் கலிஃபா (53கி) வெண்கல பதக்கம் வென்றார்.
கிரேக்கோ-ரோமன் பிரிவில் சுமித் (63கி) தங்கப் பதக்கம் வென்றார். நிதேஷ் (97), அங்கித் குலியா (72கி) வெண்கல பதக்கம் வென்றனர்.
ஃப்ரீஸ்டைல் பிரிவில் விக்கி (97கி) தங்கப் பதக்கம் வென்றார்.
நிகில் (61கி), சுஜீத் கல்கல் (65கி), ஜெய்தீப் (74கி) சந்தர்மோகன் (79கி), சச்சின் (92கி) தங்கப் பதக்கத்திற்காக மோத உள்ளனர்.