விளையாட்டு

பெண்கள் ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதில் சிக்கல் நீங்கியது

Published On 2022-08-27 09:49 IST   |   Update On 2022-08-27 09:49:00 IST
  • இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையும் திரும்ப பெறப்பட்டது.
  • பெண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்துவதில் உருவான சிக்கல் நீங்கியது.

சூரிச்:

இந்திய கால்பந்து சம்மேளனத்தில் 3-ம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) கடந்த 15-ந்தேதி அதிரடியாக தடை விதித்தது. இதனால் அக்டோபர் மாதம் இந்தியாவில் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை (19 வயதுக்குட்பட்டோர்) நடத்துவதில் முட்டுக்கட்டை விழுந்தது.

இந்த நிலையில் பிபாவின் வேண்டுகோளின்படி , 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைக்கப்பட்டதுடன், இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையும் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து வழக்கமான நடைமுறைப்படி நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

இத்தகைய நடவடிக்கையால் திருப்தி அடைந்த சர்வதேச கால்பந்து சங்கம், இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு விதித்த தடையை நேற்று நீக்கியது. இதன் மூலம் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்துவதில் உருவான சிக்கல் நீங்கியது.

Tags:    

Similar News