விளையாட்டு
null

புரோ கபடி லீக் ஜெய்ப்பூர்-பாட்னா இன்று பலப்பரீட்சை

Published On 2022-10-09 11:33 IST   |   Update On 2022-10-09 11:34:00 IST
  • 9-வது புரோ கபடி 'லீக்' போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
  • பெங்களூரு அணி 2-வது வெற்றிக்காகவும், புனே முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

பெங்களூரு:

9-வது புரோ கபடி 'லீக்' போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா ஸ்டீலர்ஸ் 41-33 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் (31-31), பாட்னா பைரேட்ஸ்-புனேரி பல்தான் (34-34) அணிகள் மோதிய ஆட்டங்கள் டையில் முடிந்தன.

இன்று 3 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்ஸ் பாந்தர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி முதல் ஆட்டத்தில் உ.பி. யோதாவிடம் தோற்றது. இதனால் அந்த அணி முதல் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. இதே போன்று பாட்னா அணியும் முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

இரவு 8.30 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தது. இதனால் முதல் வெற்றி யாருக்கு? என்று ஆவலுடன் எதிர்பார்க் கப்படுகிறது.

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் புனேரி பல்தான்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி 2-வது வெற்றிக்காகவும், புனே முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

Similar News