காமன்வெல்த்-2022

 ஸ்ரீஹரி நடராஜ்

காமன்வெல்த் போட்டி: 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் தகுதி

Published On 2022-07-30 05:05 GMT   |   Update On 2022-07-30 06:04 GMT
  • இறுதி சுற்றுக்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு.
  • டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று 27வது இடம் பிடித்தார்.

பர்மிங்காம்:

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன

ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீகரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 4 இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஏ ஹீட் பிரிவு நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான நடராஜ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 54:31 வினாடிகளில் இலக்கை கடந்து 27வது இடம் பிடித்திருந்தார்.

முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

Tags:    

Similar News