விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

Published On 2025-11-21 22:39 IST   |   Update On 2025-11-21 22:39:00 IST
  • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
  • காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.

சிட்னி:

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் - பிக்ரி ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

Similar News