விளையாட்டு

பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேறுகிறார் மெஸ்சி

Published On 2023-05-04 03:56 GMT   |   Update On 2023-05-04 03:56 GMT
  • கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது.
  • 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

பாரீஸ்:

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சவுதிஅரேபியா சுற்றுலா துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.

ஆனால் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது. இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையாக அவருக்கு லீக்1 போட்டியில் விளையாட 2 வாரங்கள் பி.எஸ்.ஜி. நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News