விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: கால்இறுதி ஆர்வத்தில் இந்தியா- சுவிட்சர்லாந்துடன் இன்று மோதல்

Published On 2025-12-02 14:34 IST   |   Update On 2025-12-02 14:34:00 IST
  • ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) ‘பி’ பிரிவில் உள்ளது.
  • இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக்குடன் இந்தியா கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

சென்னை:

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) 'பி' பிரிவில் உள்ளது.

ரோகித் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சிலியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது போட்டியில் 17-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. 2 ஆட்டத்திலும் சேர்த்து 24 கோல்களை அடித்துள்ளது. ஒரு கோல் கூட வாங்கவில்லை.

இந்திய அணி கடைசி லீக் போட்டியில் சுவிட்சர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக்குடன் கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டிரா செய்தாலே தகுதி பெற்று விடும். ஏனென்றால் 19 கோல்கள் வித்தியாசத்தில் இருக்கிறது. இந்திய வீரர் தில்ராஜ் சிங் 6 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து அணியும் ஓமன் (4-0), சிலியை ( 3-2) தோற்கடித்து இருந்தது.

Tags:    

Similar News