விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி - சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

Published On 2023-06-02 00:31 IST   |   Update On 2023-06-02 00:31:00 IST
  • இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
  • 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

சலாலா:

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அங்கட் பீர் சிங் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் அரிஜித் சிங் ஹுண்டால் ஒரு கோலும் அடித்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் அப்துல் பஷாரத் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஏற்கனவே 2004, 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News