விளையாட்டு

நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஜேஸ்வின் ஆல்டிரின் ஏமாற்றம்

Published On 2023-08-25 01:43 GMT   |   Update On 2023-08-25 01:43 GMT
  • இரண்டு முறை தவறு செய்த ஆல்டிரின் 3-வது முறையாக சோபிக்கவில்லை
  • ஸ்ரீசங்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஜேஸ்வின் ஆல்டிரின் ஏமாற்றம் அடைந்தார்.

தகுதிச்சுற்றில் 8 மீ தாண்டி கடைசி வீரராக (12-வது நபர்) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதி சுற்றில் மூன்று முறை தாண்ட வேண்டும். இதில் சிறந்த தாண்டுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனடிப்படையில் முதல் 8 பேர் அடுத்த சுற்றில் பங்கேற்க வேண்டும்.

ஜேஸ்வின் ஆல்டிரின் முதல் இரண்டு முறை தாண்டும்போது Fouling ஆனது. 3-வது முறையாக அவரால் 7.77 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது. இது முதல் 8 இடத்திற்குள் வருவதற்கு போதுமானது அல்ல. கடந்த மார்ச் மாதம் 8.42 மீ தூரம் தாண்டி சாதனைப் படைத்திருந்தார் என்து குறிப்பிடத்தக்கது.

ஆல்டிரின் உடன் ஸ்ரீசங்கரும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், 7.74 மீ தாண்டி இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

முன்னதாக, ராம் பாபூ 35 கி.மீ. நடை போட்டியில் 37-வது இடத்தையே பிடிததார். அவர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 39 நிமிடம் 07 வினாடிகளில் கடந்தார். அவரது தேசிய சாதனை 2:29:56 ஆகும்.

Tags:    

Similar News