கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்ட்: பதிலடி கொடுத்த வங்காளதேசம்- 146 ரன்னில் சுருண்ட வெஸ்ட்இண்டீஸ்

Published On 2024-12-03 11:06 IST   |   Update On 2024-12-03 11:06:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ் 76 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது.
  • வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சீட்டுகட்டு போல் சரிந்தது. அந்த அணி 65 ஓவர்களில் 146 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்டத்தில் 76 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது. வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டும், ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 18 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை விளையாடியது.

3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 41.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி இதுவரை 211 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. 

Tags:    

Similar News