கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரிமீயர் லீக் தொடர் தொடங்கும் தேதி மற்றும் போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு

Published On 2025-11-27 17:43 IST   |   Update On 2025-11-27 17:43:00 IST
  • மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.
  • இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

புதுடெல்லி:

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இந்த தொடருக்கான தேதி மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

எப்போதும் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடியும் இந்த தொடர் இந்த முறையில் ஜனவரியில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. பிப்ரவரி 7-ந் தேதி ஆண்களுக்கான உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் நடந்துள்ளது.

தொடக்கப் போட்டி நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானம் நடைபெறுவதாகவும் இறுதிப்போட்டி வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News