கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியிலும் வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

Published On 2025-09-05 09:58 IST   |   Update On 2025-09-05 09:58:00 IST
  • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 325 ரன்கள் மட்டுமே எடுத்தது.

லண்டன்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 85 ரன்னும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 58 ரன்னும், மார்க்ரம் 49 ரன்னும், பிரேவிஸ் 42 ரன்னும் விளாசினர்.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அரைசதமடித்தனர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

தென் ஆப்பிரிக்கா சார்பில் நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது

Tags:    

Similar News