கிரிக்கெட் (Cricket)
null

சகித்துக் கொள்ள முடியாத LBW.. நடுவர் பக்னர் குறித்த கேள்விக்கு சச்சினின் கலகல பதில்

Published On 2025-08-26 16:54 IST   |   Update On 2025-08-26 17:11:00 IST
  • வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் நடுவர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
  • 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் ரெடிட் சமூக வலைதளப்பக்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ரெடிட் இணையத்தில் அவ்வப்போது சச்சின் டெண்டுல்கர் நேரலையில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் ரசிகர்களிடம் பேசினார். அப்போது சச்சின் டெண்டுல்கரிடம் நிறைய ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள்.

அதில் ஸ்டீவ் பக்னர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பேட்டிங் செய்யும் போது அவருடைய கைகளுக்கு குத்துச்சண்டை கையுறைகளை (பாக்ஸிங் கிளவுஸ்) வழங்குங்கள். அப்போது தான் அவரால் தன்னுடைய விரலை உயர்த்த முடியாது. என்று கலகலப்பான பதிலை கொடுத்தார்.

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் அம்பயர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

குறிப்பாக 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதே போல சச்சின் டெண்டுல்கரை பார்த்தாலே அவர் எதிரணி விக்கெட் கேட்டால் உடனடியாக கையை உயர்த்தி அவுட் வழங்கி விடுவார்.

அவராலேயே சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 5 முதல் 7 சதங்களை தவற விட்டிருப்பார் என்றே சொல்லலாம். 

Tags:    

Similar News