கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

Published On 2025-06-08 23:09 IST   |   Update On 2025-06-08 23:09:00 IST
  • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
  • அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்கள் எடுத்தார்.

லண்டன்:

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.

கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்னும், ஜான்சன் சார்லஸ் 47 ரன்னும், ரோவ்மன் பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 34 ரன்னும், பென் டெக்கெட், டாம் பாண்டன் தலா 30 ரன்கள் எடுத்தனர். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. லூக் வுட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Tags:    

Similar News