சதத்தை தவறவிட்ட பட்லர்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
- முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
- ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.
லண்டன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் குவித்தார். ஜேமி ஸ்மித் 38 ரன் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் டாசன் 4 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ், ஜேக்கப் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.