ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா ஏ -வங்காளதேசம் ஏ அணிகள் இன்று மோதல்
- இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (201 ரன்) சூப்பர் பார்மில் உள்ளார்.
- இரவு 8 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான் - இலங்கை ‘ஏ’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோகா:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம் 'ஏ', இலங்கை 'ஏ' அணியும், 'பி' பிரிவில் பாகிஸ்தான் ஷகீன்ஸ், இந்தியா 'ஏ' அணியும் அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி, வங்காளதேசம் 'ஏ' அணியை (பிற்பகல் 3 மணி) எதிர்கொள்கிறது. இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (201 ரன்) சூப்பர் பார்மில் உள்ளார்.
கேப்டன் ஜிதேஷ் ஷர்மா, நமன்திர், பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் குர்ஜப்னீத் சிங், ஹர்ஷ் துபே, சுயாஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கின்றனர்.
இரவு 8 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான் - இலங்கை 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.