விளையாட்டு

பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்: 2வது சுற்றிலும் இந்திய ஜோடி வெற்றி

Published On 2025-12-18 23:22 IST   |   Update On 2025-12-18 23:22:00 IST
  • சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

பீஜிங்:

சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது.

இந்நிலையில், இந்திய ஜோடி இன்று தனது 2-வது போட்டியில் இந்தோனேசியாவின் பஜர் அல்பான் - ஷோஹிபுல் பிக்ரி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி முதல் செட்டை 21-11 என வென்றது. இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 21-16 என இந்தோனேசிய ஜோடி கைப்பற்றியது.

வெற்றியாளரை முடிவுசெய்யும் 3-வது செட்டை இந்திய ஜோடி 21-11 என தன்வசப்படுத்தியது.

Tags:    

Similar News