விளையாட்டு
null
இந்தியா வந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி - வைரல் வீடியோ
- மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர்.
கொல்கத்தா:
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருகை தருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கொல்கத்தா முழுவதும் மெஸ்ஸியின் ஜூரம் ஆட்டுவிக்கிறது. அவரது கட்அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
கொல்கத்தாவிற்கு வந்தடைந்த மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் வழிநெடுகிலும் கூட்டமாக நின்று ஆரவாரமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.