விளையாட்டு
4 விக்கெட் கைப்பற்றிய பூஜா வஸ்த்ராசாகர்

பெண்கள் டி20 கிரிக்கெட் - 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வெற்றி

Update: 2022-05-23 21:36 GMT
பெண்கள் சேலஞ்ச் கோப்பை டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது.
புனே:

3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முதல் லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல்பிளேசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த சூப்பர்நோவாஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன், ஹர்லின் தியோல் 35 ரன், டாட்டின் 32 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரையல் பிளேசர்ஸ் ஆடியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் டிரையல் பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் நோவாஸ் சார்பில் பூஜா வஸ்த்ராசாகர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
Tags:    

Similar News