விளையாட்டு
பிரக்ஞானந்தா, கார்ல்சன்

செஸ் போட்டி: உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

Published On 2022-05-21 12:59 IST   |   Update On 2022-05-21 12:59:00 IST
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை:

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் அதிவேக செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்துகொண்டு செஸ் ஆடி வருகின்றனர்.

இதில் 5வது சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். 

இந்த போட்டி சமனில் முடிய இருந்த நிலையில், 40வது சுற்றுக்கு பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறினை புரிந்துகொண்ட பிரக்ஞானந்தா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார். 

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டில் 2வது முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.



போட்டியின் 2வது நாள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

சீனாவின் வேய் யி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டேவிட் ஆண்டன் 15 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

Similar News