விளையாட்டு
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

ஒடிசாவில் ஐபிஎல் சூதாட்டம்- 9 பேர் கைது

Published On 2022-04-18 03:29 IST   |   Update On 2022-04-18 03:29:00 IST
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரூர்கேலா:

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

9 பேரும் ஒடிசாவின் பிரமித்ராபூர் தொகுதியில் உள்ள ஜமுனானகி கிராமத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டனர்.

அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரமித்ராபூர் காவல்துறை அதிகாரி மனாஸ் பிரதான் தெரிவித்துள்ளார்.

Similar News