விளையாட்டு
ஐ.எஸ்.எல்: ஜாம்ஷெட்பூர் கால்பந்து அணி வெற்றி
ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் முதலிடம் பிடித்தது.
கோவாவில் நடைபெற்று வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்களுக்கு போட்டியை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.
அந்த அணியின் சிங்கெல்சனா சிங் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
தொடர்ந்து பீட்டர் ஹார்ட்லி, டேனியல் சீமா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பதிலுக்கு ஐதராபாத் அணி வீரர்களின் கோல் போடும் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
ஆட்டத்தின் முடிவில் 3-0 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 37 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்தது. மேலும் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட ஜாம்ஷெட்பூர் தகுதி பெற்றுள்ளது.