செய்திகள்
ஷெரிக்கா ஜேக்சன்

200மீ ஓட்டத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்த ஜமைக்கா வீராங்கனை

Published On 2021-08-02 05:40 GMT   |   Update On 2021-08-02 05:40 GMT
100மீ ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜமைக்கா வீராங்கனை ஜேக்சன், 200மீ ஓட்டத்திற்கான தகுதிச்சுற்றில் பின்தங்கி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது 100மீ, 200மீ ஓட்டப் பதந்தயங்கள். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்கள் உலகின் அதிவேக வீரர்/வீராங்கனைகள் என அழைக்கப்படுவார்கள்.

ஜமைக்கா, அமெரிக்க வீரர்கள்/வீராங்கனைகள் இதில் ஆதிக்கம் செலுத்துவார்கள். பெண்களுக்கான 100மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனைகள் மூன்று பதக்கங்களையும் வென்றனர். ஷெரிக்கா ஜேக்சன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இன்று பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தின் தகுதிச்சுற்று நடைபெற்றது. ஷெரிக்கா ஜேக்சன் ஹீட்ஸ் 5-ல் ஓடினார். அவருடன் மேலும் ஐந்து வீராங்கனைகள் பங்கேற்றனர். பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இதில் ஷெரிக்கா ஜேக்சன், இத்தாலியின்  டலியா கட்டாரியா ஆகியோர் பந்தய தூரத்தை 23.26 வினாடிகளில் கடந்தனர். மில்லி செகண்ட் அடிப்படையில் டலியா கட்டாரியா (.251) 3-வது இடத்தை பிடித்தார். ஜேக்சன் (.255) .004 மில்லி செகண்ட் வித்தியாசத்தில் பின்தங்கி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
Tags:    

Similar News