செய்திகள்
ஜமைக்கா வீராங்கனை

பெண்கள் 100மீ ஓட்டப்பந்தையம்: மூன்று பதக்கங்களையும் தட்டிச்சென்றது ஜமைக்கா

Published On 2021-07-31 18:59 IST   |   Update On 2021-07-31 18:59:00 IST
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கத்தையும் தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையம் இறுதிச்சுற்று இன்று மாலை நடைபெற்றது. இதில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள், ஐவரி கோஸ்ட் வீராங்கனை, சுவிட்சர்லாந்தின் இரண்டு வீராங்கனைகள், அமெரிக்க வீராங்கனை, பிரிட்டன் வீராங்கனை என 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

விசில் ஊதியதும் எட்டு வீராங்கனைளும் சிட்டாக பறந்தனர். ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 10.61 வினாடிகளில் கடந்தது ஒலிம்பிக் சாதனையாகும். இதற்கு 10.62 வினாடிகளில் அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் பந்தைய தூரத்தை கடந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.



மற்றொரு ஜமைக்கா வீராங்கனை ஷெலி-அன் ஃப்ராசன்-பிரைஸ் 10.74 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு ஜமைக்கா வீராங்கனை ஷெரிக்கா ஜேக்சன் 10.76 வினாடிகளில் கடந்த வெண்கலப்பதக்கம் வென்றார்.

Similar News