செய்திகள்
பிவி சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

Published On 2021-07-31 10:55 GMT   |   Update On 2021-07-31 14:17 GMT
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பி.வி. சிந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றினார்.
டோக்கியோ :

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து (6) சீன தைஃபேயின் தை சூ-யிங்கை (2) எதிர்கொண்டார்

இந்த போட்டியின் முதல் செட்டில் பி.வி. சிந்து ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்திய காரணமாக 18-21 என்ற கணக்கில் முதல் செட்டில் தோல்வி அடைந்தார்.

2 செட்டில் தொடக்கத்தில் இருந்தே தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்தினார். இடைவேளையின் போது 11-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பின் பி.வி. சிந்துவால் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற முடியவில்லை. இதனால் 2-வது செட்டையும் சீன தைஃபே வீராங்கனை தை சூ-யிங் 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி பி.வி. சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இப்போட்டியில் தோல்வி அடைந்த பி.வி. சிந்து, மற்றோரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹிபிங்கை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் எதிர் கொள்கிறார். இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News