செய்திகள்
பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் தோல்வி
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
ஒலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், இந்தியாவை சேர்ந்த சாய் பிரணீத், இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனை எதிர்கொண்டார்.
இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனிடம் 21-17, 21-15 என்ற நேர்செட் கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார்.
இந்திய வீரர் சாய் பிரணீத் கடந்த 2010 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2016 தெற்காசிய போட்டிகளின் அணி பிரிவில் தங்கம், 2016 மற்றும் 2020 ஆசிய சாம்பியன்ஷிப்பின் அணி பிரிவில் வெண்கலம், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் ஆகியவை சாய் பிரனீத் பெற்ற மிக முக்கிய வெற்றிகள் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.