செய்திகள்
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் உகாண்டா அணியினர்.

ஜப்பான் சென்ற உகாண்டா அணியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-06-21 08:49 IST   |   Update On 2021-06-21 08:49:00 IST
ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
டோக்கியோ:

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இப்போதே ஒவ்வொரு அணிகளாக ஜப்பான் செல்ல தொடங்கி விட்டன.

ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ஜப்பான் கிளம்புவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவே வந்துள்ளது.

தொற்றுக்குள்ளான நபரை தவிர மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News