செய்திகள்
சந்திரா தோமர்

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-01 05:53 IST   |   Update On 2021-05-01 05:53:00 IST
மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
புதுடெல்லி:

இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் (89) கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

சந்திரா தோமர் 60 வயதுக்கு பிறகு தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றார். மூத்தோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார்.

அவரது மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News