செய்திகள்
டெல்லி அணி வீரர்கள்

150 ரன்களுக்குக் கீழ் அடித்தால் வெற்றி இல்லை: தொடரும் டெல்லி அணியின் மோசமான சாதனை

Published On 2021-04-16 10:47 GMT   |   Update On 2021-04-16 10:47 GMT
ராஜஸ்தானுக்கு எதிராக 2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தால் மட்டுமே தோல்வி என்ற நிலையில், டெல்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 147 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

அந்த அணிக்கு 150 ரன்களுக்கு கீழ் முதலில் பேட்டிங் செய்து எடுத்தால், எதிரணியை அதற்குள் கட்டுப்படுத்தியதே கிடையாது என்ற மோசமான சாதனை உள்ளது.

இந்த போட்டியிலும் அது நிகழக்கூடாது என டெல்லி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதால், அந்த மோசமான சாதனை டெல்லி டேர்வில்ஸ் அணியை பின்தொடர்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 26 முறை முதலில் பேட்டிங் செய்து 150 ரன்களுக்கு கீழ் அடித்துள்ளது. அதில் ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது.



நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது, கடைசி 2 ஓவரில் 27 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருந்தது. இதனால் டெல்லி அணிக்கு வாய்ப்பு இருந்தது.

19-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் மோரிஸ் 2 சிக்சருடன் 15 ரன்கள் அடித்துவிட்டார். இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஓவரிலும் கிறிஸ் மோரிஸ் இரண்டு சிக்சர் விளாச டெல்லி அணி 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் தோல்வியைத் தழுவியது.
Tags:    

Similar News