செய்திகள்
தரவரிசை பட்டியல்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா

Published On 2021-03-06 17:12 IST   |   Update On 2021-03-06 17:12:00 IST
அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
புதுடெல்லி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றிவாகை சூடியது. குறிப்பாக அகமதாபாத்தில் இன்று நிறைவடைந்த கடைசி போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-1 என கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 122 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் உள்ளது. 

இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (105), பாகிஸ்தான் (90), தென் ஆப்பிரிக்கா (89), இலங்கை (83), வெஸ்ட் இண்டீஸ் (80), ஆப்கானிஸ்தான் (57), வங்கதேசம் (51) ஆகிய அணிகள் உள்ளன.

Similar News