செய்திகள்
பிசிசிஐ தலைவர் கங்குலி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும்: பிசிசிஐ தலைவர் கங்குலி

Published On 2020-08-30 10:04 GMT   |   Update On 2020-08-30 10:04 GMT
சென்னை அணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. எல்லா அணிகளும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி்ல் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அணி வீரர்கள் அனைவரும் இன்னும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு இதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில் சவுரவ் கங்குலி இதுகுறித்து கூறுகையில் ‘‘சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து என்னால் கூற இயலாது.

போட்டி அட்டவணைப்படி ஐபிஎல் தொடர் தொடங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மிக நீண்ட தொடர் என்பதால், எல்லாம் சிறப்பாக செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறேன்.

ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. கள நிலவரத்ரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

வழக்கமான அட்டவணைப்படி நான் எனது வேலையை தெடங்கியுள்ளேன். கட்டாயம் பாதுகாப்புடன் நம்முடைய வேலையை செய்ய வேண்டிய நேரம் இது. நான் குடும்பம், கிரிக்கெட், பிசிசிஐ, மீடியா வேலை ஆகியவற்றை சமாளித்து வருகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News