செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டன்

Published On 2020-07-01 09:30 GMT   |   Update On 2020-07-01 09:30 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஜோ ரூட் விலக இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே  4 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக  இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8-ந் தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆடாததால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜோ ரூட் மனைவிக்கு  இந்த வாரம் 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அவர் விளையாடவில்லை.

உலக கோப்பை ஹீரோவான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருக்கிறார். தற்போது முதல் முறையாக கேப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பொதுவாக போட்டிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அணுகுமுறையை எப்போதும் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கருதுபவன். கேப்டன் ஆகிவிட்டேன் என்பதற்காக எனது அணுகுமுறையில் மாற்றம் எதுவும் செய்ய மாட்டேன்.

இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகிப்பது கவரமாகும். ஒரு போட்டிக்கு மட்டும் என்றாலும் கூட இங்கிலாந்து அணிக்கு நானும் கேப்டனாக இருந்தேன் என்று எப்போதும் சொல்லலாம்.

இவர் பென்ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

முன்னதாக அவரை கேப்டனாக நியமிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. அதையும் மீறி இங்கிலாந்து தேர்வுக்குழு அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.
Tags:    

Similar News