செய்திகள்
சோயிப் அக்தர், தமிம் இக்பால்

என்னைக் கொன்று விடுவார் என்று உணர்ந்தேன்: சோயிப் அக்தர் பந்தை எதிர்கொண்ட தமிம் இக்பால் சொல்கிறார்

Published On 2020-05-12 09:48 GMT   |   Update On 2020-05-12 09:48 GMT
சோயிப் அக்தர் மிகவும் பயமுறுத்தும் நபர் போன்று இருந்தார், என்னைக் கொன்று விடுவார் என்று உணர்ந்தேன் என தமிம் இக்பால் நினைவு கூர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. இதனால் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பந்தை எதிர்கொண்டது குறித்து வங்காளதேச அணியில் இடது கை பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறுகையில் ‘‘எனக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. ஏராளமான பேட்ஸ்மேன்களுக்கும் நடந்தன.

150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஏராளமான பந்து வீச்சாளர்களை நான் எதிர்கொண்டுள்ளேன். ஆனால் முதல் முறையாக சோயிப் அக்தரை சந்திக்கும்போது மிகவும் பயந்தேன். இதை நான் ஏற்கனவே சொல்கியிருக்கிறேன். அந்த நாளில் அவர் என்னை கொன்று விடுவார் என்று உணர்ந்தேன். அவர் பயமுறுத்தும் நபராக இருந்தார்’’ என்றார்.
Tags:    

Similar News