செய்திகள்
முகமது கைஃப் (பழைய படம்)

தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்கள் சிறந்த பீல்டர்களா?: முகமது கைஃப் விளக்கம்

Published On 2020-05-11 14:55 GMT   |   Update On 2020-05-11 14:55 GMT
தற்போதுள்ள இந்திய அணி வீரர்களிடம் பீல்டர்களுக்கான பண்பில் சற்று குறைபாடுகள் உள்ளன என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது கைஃப். இவர் யுவராஜ் சிங் உடன் இணைந்து அணியில் அறிமுகம் ஆனார். இருவரும் பீல்டிங் செய்வதில் வல்லவர்கள். பந்தை டைவ் அடித்து பிடிப்பது, பிடித்த வேகத்தில் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிவதில் கில்லாடிகள்.

தற்போதுள்ள பீல்டர்களிடம் யுவராஜ் சிங் மற்றும் என்னைப் போன்று பீல்டர்களுக்கான ஒட்டுமொத்த பண்புகளும் இல்லை என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது கைஃப் கூறுகையில் ‘‘பந்தை சிறப்பாக கேட்ச் பிடிப்பவர், ஸ்டம்பை அடிக்கடி தாக்கக்கூடிய வகையில் பந்தை எறியும் திறமை படைத்தவர், பந்தை நோக்கி வேகமாக ஓடும் திறமைப் படைத்தவர், மைதானத்தில் பந்து பட்டு திரும்பும் திசையை சரியான கணித்து பிடிக்கும் டெக்னிக் போன்றவைகளை கொண்டவர்கள்தான் முழுமையாக தொகுப்பு கொண்ட பீல்டர்கள்.



நாங்கள் விளையாடிய காலத்தில், நானும் யுவராஜ் சிங்கும் சிறந்த பீல்டர்கள் என்ற அடையாளத்தை பதித்தோம். தற்போது, இந்திய அணியில் நீங்கள் சிறந்த பீல்டர்களை கண்டுபிடிக்கலாம். ஆனால், அவர்கள் பீல்டர்களுக்கான முழுமையான பண்புகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

ஒரு வீரராக ஸ்லிப் திசை, ஷார்ட்-லெக், லாங்-ஆன் பவுண்டரியில் வேகமாக ஓடி பந்தை பிடிக்க முடியும். தற்போதைய அணியில் இந்த பேக்கேஜ் மிஸ்சிங்’’ என்றார்.
Tags:    

Similar News