செய்திகள்
வார்னர்

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவது கடினமானது - வார்னர்

Published On 2020-05-09 12:57 IST   |   Update On 2020-05-09 12:57:00 IST
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுவது கடினமானது என்று அந்நாட்டு முன்னணி வீரர்களில ஒருவரான டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
மெல்போர்ன்:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டி மற்றும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டம் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதேப்போல பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் ரத்தானது.

இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் காலவரையின்றி. ஒத்திவைக்கப்பட்டது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30 தேதி வரை வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா வர அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பையின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுவது கடினமானது என்று அந்நாட்டு முன்னணி வீரர்களில ஒருவரான டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் இந்திய வீரர் ரோகித்சர்மா விடம் கூறியதாவது;

கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டு வீரர்களும் (16 அணிகள்) ஒன்றிணைவது கடினமானது.

இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

Similar News