செய்திகள்
மோர்கன்

ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர் கிரிக்கெட்தான் பொருத்தமானது: இங்கிலாந்து கேப்டன் சொல்கிறார்

Published On 2020-05-08 11:59 GMT   |   Update On 2020-05-08 11:59 GMT
ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர் கிரிக்கெட்டுதான் பொருத்தமானதாக இருக்கும் என இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட் (5 நாள் ஆட்டம்), ஒருநாள் போட்டி (50 ஓவர்) மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய 3 வடிவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.

இதற்கிடையே 10 ஓவர் கிரிக்கெட் போட்டி அமலுக்கு வந்துள்ளது. இது தற்போது லீக் அளவில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர் கிரிக்கெட் போட்டிதான் பொருத்தமானது என்று இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்றவற்றிற்கு 10 ஓவர் கிரிக்கெட் பொருத்தமானதாக இருக்கும். மற்ற வகை கிரக்கெட்டை விடவும் 10 ஓவர் இந்த வாய்ப்பை வழங்குகிறது. ஒட்டுமொத்த போட்டியையும், 10 நாட்களில் முடித்து விடலாம். இதன்மூலம் கிரிக்கெட்டுக்கு கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும். 8 முதல் 10 நாட்களில் முடிவடைகிற போட்டிதான் எல்லாவற்றிற்கும் ஏற்றதாக இருக்கும். மேலும் அதிக பொழுது போக்கையும் ரசிகர்களுக்கு அளிக்கும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான அபுதாபி 10 ஓவர் லீக் போட்டி நவம்பர் 19 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். கடந்த ஆண்டு நடந்த அபுதாபி 10 ஓவர் லீக் போட்டியில் பிராவோ தலைமையிலான மராத்தா அரேபியன் அணி வெற்றி பெற்றது.
Tags:    

Similar News