செய்திகள்
ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு

கால்பந்து அணிகளுக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது UEFA

Published On 2020-04-28 15:52 IST   |   Update On 2020-04-28 15:52:00 IST
ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (UEFA), கால்பந்து கிளப்புகளை காப்பாற்ற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து கால்பந்து லீக் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அணிகளை ஒருங்கிணைத்து ஐரோப்பிய கால்பந்து சங்களுக்கான கூட்டமைப்பு (UEFA) செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பில் 55 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலான கால்பந்து சங்கங்கள் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. அவைகளுக்கு உதவுவதற்காக 236.5 மில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் ரூ, 1958.69 கோடி) நிதியை வழங்கியுள்ளது. ஒவ்வொரு சங்கத்திற்கும் 4.3 மில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் சுமார் 35.61 கோடி ரூபாய்) கிடைக்கும்.

யூரோ சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பியா லீக் ஆகியவை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News