செய்திகள்
அனில் சவுத்ரி

போன் பேசுவதற்காக மரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது: கிராமத்தில் சிக்கிய சர்வதேச கிரிக்கெட் நடுவர் சொல்கிறார்

Published On 2020-04-10 11:20 GMT   |   Update On 2020-04-10 11:20 GMT
இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் இருப்பதால் போன் பேசுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்.
இந்திய கிரிக்கெட் நடுவர்களில் ஒருவர் அனில் சவுத்ரி. இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பிரிவில் நடுவராக உள்ளார். இதுவரை 20 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.



உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிராமத்திலேயே தங்கியுள்ளார். குக்கிராமம் என்பதால் மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லையாம். இதனால் நெட்வொர்க் கிடைப்பதற்காக மரத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மார்ச் 16-ந்தேதியில் இருந்து என்னுடைய இரண்டு மகன்களுடன் இங்கு இருக்கிறேன். இந்த கிராமத்தில் சில நாட்கள் இருப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் தற்போது அதை பின்பற்றி இங்கேயே இருக்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் மனைவி டெல்லியில் இருக்கிறார்கள்.



இங்கு எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே நெட்வொர்க்குதான். என்னால் யாருடன் பேசவும் முடியவில்லை. இண்டர்நெட் தொடர்பும் இல்லை. நெட்வொர்க் கிடைக்க வேண்டுமென்றால் கிராமத்தில் இருந்து சற்று வெளியேறி மரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி இருந்தாலும் எப்பொழுதும் நெட்வொர்க் கிடைப்பதில்லை’’ என்றார்.
Tags:    

Similar News