செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை வீடியோ மூலம் நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

Published On 2020-04-09 16:58 GMT   |   Update On 2020-04-09 16:58 GMT
பாகிஸ்தான் கிரக்கெட் அணி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை வீடியோ மூலம் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்வில் தோல்வியடைந்தால் அணியில் இடமில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் முடிந்த பின்னர் மார்ச் 23-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை நடத்த இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்ததால் போட்டிகள் நிறுத்தப்பட்டு நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் மைதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வருகிற 20-ந்தேதி மற்றும் 21-ந்தேதி வரை வீடியோ மூலம் வீரர்களிடம் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
Tags:    

Similar News