செய்திகள்
ஜோர்டன் ஹெண்டர்சன்

நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளையை தொடங்கிய இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கிளப் அணி கேப்டன்கள்

Published On 2020-04-09 16:16 GMT   |   Update On 2020-04-09 16:16 GMT
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை அமைப்பிற்கு உதவும் வகையில் பிரிமீயர் லீக் கிளப் அணி கேப்டன்கள் நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளையை தொடங்கியுள்ளனர்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக பரவியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளது.

அதன்பின் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்சில் ருத்ர தாண்டவம் ஆடியது. தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து லீக்குகள் மிகவும் பிரபலம். இதில் விளையாடும் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள்.

தற்போது விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். மேலும் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு நிதி வழங்கி உதவியுள்ளனர்.

இதன்அடிப்படையில் இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் 20 கிளப்புகளின் கேப்டன்கள் இணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி தேசிய சுகாதார அமைப்புக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.

இந்த அமைப்புக்கு லிவர்பூல் அணியின் ஜோர்டன் ஹெண்டர்சன் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். இவருடன் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஹாரி மாகுயிர், வாட்போர்டின் டிரோய் டீனி, வெஸ்ட் ஹாம் அணியின் மர்க் நோபிள் ஆகியோரும் நிர்வாகியாக உள்ளனர். இவர்கள் #PlayersTogether மூலம் பிரிமீயர் லீக்கில் விளையாடும் அனைத்து வீரர்களையும் ஒன்று திரட்டி அவர்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு அணிக்கும் தலைமை ஏற்றுள்ள வீரர்கள் அணியுடன் சக வீரர்களுன் பேசி நிதியை சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அப்போது ஒரு அணியைவிட மற்ற அணி அதிகமான தொகையை கொடுத்தால் அதை எப்படி நிர்வகிப்பது போன்ற சந்தேகங்கள் வீரர்களுக்கு ஏற்பட்ட போதிலும், இது மத்திய நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்டு உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் பகிர்ந்து அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் தாங்கள் வழங்கும் தொகை அவர்கள் கிளப் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு செலவிட வேண்டும். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டிற்கு உதவ விரும்புவார்கள். அப்படி இருக்கும்போது நிதியை எப்படி பகிர்ந்து அளிப்பது போன்ற விவாதங்களும் ஏற்பட்டன.

இறுதியாக ஒவ்வொரு அணி கேப்டன்களும் அவர்களது அணி வீரர்களும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முயன்றனர். அவர்கள் நிர்ணயித்த தொகைக்கு மேல் கொடுக்க முயன்றால் சந்தோசமாக வாங்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News