செய்திகள்
சாடியோ மானே

எனது கனவு, இல்லை என்றாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்: லிபர்பூல் வீரர் சாடியோ மானே சொல்கிறார்

Published On 2020-04-09 13:18 GMT   |   Update On 2020-04-09 13:18 GMT
இங்கிலிஷ் பிரிமீயர் லீக் ரத்து செய்யப்பட்டு சாம்பியன் கோப்பை இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என லிவர்பூல் வீர்ர சாடினோ மானே தெரிவித்துள்ளார்.
உலக அளவில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்களில் மிகவும் பிரபலமான லீக்குகளில் ஒன்று இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக். 2019-2020 சீசனில் லிபர்பூல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

அதனடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் 38 போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது வரை ஏறக்குறைய 29 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் லிவர்பூல் அணி அதிக புள்ளிகள் பெற்றதோடு 2-வது அணிக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனால் இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிடும்.

30 வருடத்திற்குப் பிறகு லிபர்பூல் கோப்பையை வெல்ல இருப்பது குறித்து அந்த அணியின் வீரர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் இங்கிலிஷ் பிரிமீயர் லீக் இத்துடன் முடிவடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை அப்படி முடிவடைந்தால் எந்த அணிக்கும் சாம்பியன் பட்டம் வழங்கப்படாது எனத் தெரிகிறது.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் சாடியோ மானே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாடியோ மானே கூறுகையில் ‘‘போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று விரும்புகிறேன். இதை கட்டாயம் நான் விரும்புவேன்.

இந்த சூழ்நிலையில் எது நடந்தாலும் அதை புரிந்துகொள்வேன். இது லிவர்பூல் அணிக்கு மிகவும் கடினமானது. ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்கள் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். சில மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். பலருக்கு சிக்கலான சூழ்நிலை உள்ளது. ஆனால், கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு. தற்போதைய சூழ்நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்றால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். வாழ்வின் ஒரு பகுதி இது. அடுத்த வருடம் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.

லிவர்பூல் 29 போட்டிகளில் விளையாடி 82 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 28 போட்டிகளில் விளையாடி 57 புள்ளிகள் பெற்றுள்ளது.
Tags:    

Similar News