செய்திகள்
ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாகன்

2005-ம் ஆண்டு நடைபெற்ற தொடர்தான் சிறந்த ஆஷஸ் தொடர்களில் ஒன்று: ரிக்கி பாண்டிங்

Published On 2020-04-09 13:05 GMT   |   Update On 2020-04-09 13:05 GMT
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக ரிக்கி பாண்டிங், 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர்தான் எல்லாக்காலங்களிலும் சிறந்த தொடர் எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெறாமல் இருப்பதால் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். சில வீரர்கள் லைவ் செசன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டியிடம் பிடித்த ஆஷஸ் தொடர் குறித்து விவரிக்குமாறு கேட்டார். அதற்கு 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர்தான் எல்லாக்காலக்கட்டங்களில் சிறந்த தொடர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

2005-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால், 2-வது மற்றும் நான்காவது டெஸ்டில் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

‘‘சில ஆஷஸ் தொடர்களில் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. நான் எட்டு முதல் ஒன்பது ஆஷஸ் தொடரில் விளையாடி விட்டேன். ஆக, எனக்கு நினைவுக்கூறத்தக்க பல சம்பவங்கள் உண்டு. சில விஷயங்கள் நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.

மைக்கேல் வாகன் தலைமையிலான இங்கிலாந்து அணி எங்களை 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் எதிர்த்து விளையாடியது குறித்த நினைவுகள் உண்டு. அது எந்தக்காலக்கட்டத்திலும் சிறந்த தொடராக இருக்கும். வாகன் தலைமையிலானது சிறந்த அணியாக இருந்தது. நாங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்றோம்.

அதன்பின் நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் தோல்வியடைந்தோம். 3-வது டெஸ்டில் கடுமையாக போராடி டிரா செய்தோம். நான்காவது டெஸ்டில் தோல்வியடைந்தார். கடைசி டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடரை இழந்தோம். துரதிருஷ்டவசமாக எங்களுடைய ஆட்டம் போதுமான அளவிற்கு சிறந்ததாக இல்லாமல் போய்விட்டது. பிரெட் லீ, பிளின்டாப் ஆகியோரின் சந்தோச வெளிப்பாடு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பிளின்டாப் பிரரெட் லீயிடம் சென்று கைக்குலுக்கிய சம்பவம் இந்த தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை நினைவில் வைக்க முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் ஆடுகளத்தில் மிகவும் கடினமாக விளையாடினோம். வாகனின் அணி வெற்றி பெற்றது ’’என்றார்.
Tags:    

Similar News