செய்திகள்
தடகளம்

ஒலிம்பிக்கான தகுதிபோட்டிகள் ஒத்திவைப்பு இந்திய தடகள வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு: பயிற்சியாளர்

Published On 2020-04-08 13:50 GMT   |   Update On 2020-04-08 13:50 GMT
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி தொடர்களை எட்டு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என துணை தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தடகள பிரிவில் ஏப்ரல் 6-ந்தேதியில் இருந்து ஜூன் வரை நடைபெறும் போட்களில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகும்பெறும் வகையில் தகுதிச்சுற்றுக் நடைபெற இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நவம்பர் 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாதிப்படைவார்கள் என துணைத் தலைமை பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நாயர் கூறுகையில் ‘‘உலக தடகளம் நவம்பர் 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தது தேஜிந்தர் பால் சிங் தூர் (குண்டு எறிதல்), அனு ராணி (ஈட்டி எறிதல்), எம். ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் ஆகியோருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏராளமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்களா? என்பது தெரியவில்லை. மேலும் தடகளத்திற்கான தகுதிக் காலம் ஏறக்குறைய இரண்டு வருடம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல’’ என்றார்.

நவம்பர் 30-க்கு முன் நடைபெறும் எந்த போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் அது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியாக எடுத்துக் கொள்ளமாட்டாது. உலக தரவரிசைக்கான புள்ளிகளில் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மற்றொரு ஓட்டப்பந்த வீராங்கனை ஹிமா தாஸ் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்), 4X400 கலப்பு ரிலே அணி, கே.டி. இர்பான் (ஆண்களுக்கான 20 கி.மீட்டர் நடை ஓட்டம்), பாவ்னா ஜாட் (பெண்களுக்கான 20 கி.மீட்டர் நடை ஓட்டம்), அவினாஷ் சேபில் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்) ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News